தற்காலிக காய்கறி மார்கெட் மற்றும் காமராஜ் காய்கறி மார்கெட் பகுதிகளை
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தூத்துக்குடி தற்காலிக பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விற்பனைக்காக
வைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்கெட் மற்றும் காமராஜ் காய்கறி மார்கெட் பகுதிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, இன்று (27.03.2020) நேரில்
பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், உடன்
இருந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானோ வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசின்
உத்தரவுப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்களுக்கு
தடையின்றி அத்யாவசிய பொருட்கள் கிடைப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மளிகை பொருட்கள் எளிதில்
பெறுவதற்காக பல்வேறு கடைகளின் தொலைபேசி எண்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம்
வெளியிடப்பட்டது. அதேபோல் நகராட்சி, பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும்
அத்யாவசிய பொருட்கள் பெற மளிகை கடைகளின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டு
பொதுமக்களுக்கு எளிதான முறையில் அத்யாவசிய பொருட்களை பெற நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி தூத்துக்குடி
மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அரசு தெரிவித்துள்ளபடி
கொரானோ தொற்று பரவாமல் தடுக்கவும், பொதுமக்கள் அத்யாவசிய பொருட்களான காய்கறிகள் ஒரு
மீட்டர் தூரம் இடைவெளியில் நின்று வாங்கிச்செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இன்று தூத்துக்குடி தற்காலிக பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விற்பனைக்காக
வைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்கெட் மற்றும் காமராஜ் காய்கறி மார்கெட் பகுதியில் மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
மேலும், வியாபாரிகளிடம்
தங்களுக்கு காய்கறிகள் எடுத்துச்செல்ல ஏதேனும் சிரமம் உள்ளதா என்பதையும் கேட்டறிந்து, வேறு
ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை அணுக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஒரு மீட்டர் இடைவெளியில் பொதுமக்கள் வரிசையாக நின்று காய்கறிகளை வாங்கிச்செல்ல
வியாபாரிகள் உறுதி செய்ய வேண்டும். இதனை அலுவலர்களும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
காமராஜ் காய்கறி
மார்கெட்டில் மொத்த விற்பனை மட்டுமே செய்திடவும், சில்லறை விற்பனை மூலம் காய்கறிகள் வாங்க
பொதுமக்கள் அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளதால் சில்லறை விற்பனையை தற்காலிகமாக பேருந்து
நிலையத்தில் மட்டும் மேற்கொள்ள மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி
ஆணையரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது அலுவலர்கள் உடன் இருந்தனர்.